போரில் தோல்வியடைந்த புதின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் தங்களது பகுதிகளை உக்ரைன் மீண்டும் மீட்டது. தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட திட்டம் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Abbas Gallyamov என்பவர் கூறியதாவது, “தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோற்றுள்ளார். இதனால் அவர் முதலில் சீனாவிற்கு தப்பிச்செல்ல திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் சீனாவிற்கு தோற்பவர்களை பிடிக்காது என்பதால் அந்த முயற்சியை கைவிட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் அர்ஜெண்டினா அல்லது வெனிசுவேலா நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். ஆனால் எனக்கு அர்ஜெண்டினா குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியாது. மேலும் ரஷியாவில் வாழும் பணக்காரர்களில் ஒருவரான lgor sechin என்பவர் இந்த தகவலை அளித்ததாக” கூறியுள்ளார்.