மின்னல் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வினோபா நகரில் விவசாயியான ரத்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ரத்னாவின் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் ரதனாவின் தோட்டத்தில் இருந்த 5 தென்னை மரங்களும் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.