Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு… விமானத்தில் வந்திறங்கி டிராக்டரில் செல்லும் பயணிகள்….!!!!!!

இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக நெரிசல் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கனமழையின் காரணமாக பெங்களூர் நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு பெயர் போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மழைக்குப் பின் தண்ணீர் தேங்குவது வாடிக்கை என பெங்களூர் வாசிகள் சகித்துக் கொள்கின்றார்கள்.

இந்த நிலையில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் நிரந்தர தீர்வு இல்லை சாலை அமைக்கும் போது வடிகால் அமைப்பு சரியாக அமைக்கப்படவில்லை இது பல சிரமங்களுக்கு வழி வகுத்து வருகின்றது. பொதுமக்கள் பல பெண்கள் தண்ணீரில் தவறி தவறி விழுந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும் புகார்கள் முன் வைத்திருக்கின்றனர். மேலும் பெங்களூரில் தற்போதுள்ள சூழ்நிலையை முன்னிட்டு பல வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றது. அந்த வகையில் பெங்களூர் விமான நிலையத்திற்கு சொகுசு விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் நகரத்திற்குள் கார்ப்பரேஷன் டிராக்டர் மூலமாக அழைத்து வரப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |