Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் நிலை…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

ஊரடங்கு காரணமாக ஷாங்காய் மாகாணத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

சீனா நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று  அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த ஷாங்காய் நகரில் மீண்டும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஊரக பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்நாட்டு அரசு வேலை இல்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் அளவில் இருந்தாலும் கொரோனா பொது முடக்கம் காரணத்தினால் தினம்தோறும் வேலை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  மேலும் குறிப்பாக 16 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்கள் வேலையில்லா எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |