மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அலறியடித்தபடி ஓடி வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த சிறுவனை தூக்கிச் செல்கிறார். இதனையடுத்து கீழே விழுந்த அந்த நபரை மீட்டு செல்ல முயற்சிகள் நடைபெற்றது. இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.