ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே அமைந்துள்ள மாநிலம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் பாத்கீஸ் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் திடீரென 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.