அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ரோடரிக் ராண்டால் என்பவர் தனது மகன் மற்றும் பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போது, ராண்டால் தனது துப்பாக்கியை விடுதி அறையில் உள்ள அலமாரியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது 8 வயது மகன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக துப்பாக்கியல் இருந்த குண்டு வெளியே வந்து குழந்தை மீது பாய்ந்தில் குழந்தை பலியானது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் சிறுவன் கையில் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.