Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16 வயது சிறுமியை…. 2 வருடங்களாக சகோதரன், தந்தை செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 43 வயதான தந்தை ஒருவர் தனது மகளை ( 16 வயது ) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த 16 வயது சிறுமியை அவருடைய சகோதரனும் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

ஆனால் அந்த சிறுமி தனது மற்றொரு சகோதரிக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ ? என்ற பயத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை 2 வருடங்களாக வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் கூறியிருக்கிறார்.

அதன்பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கும், அரசு சாரா அமைப்புக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய சகோதரன் மற்றும் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |