இங்கிலாந்திலிருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானத்தின் மீது நடுவானில் வைத்து பனிக்கட்டி குவியல் விழுந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனிலிருந்து கோஸ்டாரிகா நாட்டிற்கு சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று சென்றுள்ளது.
இந்த விமானம் வானில் 35,000 அடி உயரம் பறந்துள்ளது. அப்போது இந்த விமானத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் மற்றொரு விமானம் பறந்துள்ளது.
இந்நிலையில் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து லண்டனிலிருந்து கோஸ்டாரிகா நாட்டிற்கு சென்ற விமானத்தின் மீது பனிக்கட்டி குவியல் விழுந்துள்ளது.
இதனால் லண்டன் விமானத்திலுள்ள இரு அங்குல கண்ணாடி உடைந்துள்ளது. இருப்பினும் விமானிகள் மிகவும் சாமர்த்தியமாக தங்களது விமானத்தை கோஸ்டாரிகா நாட்டில் தரையிறக்கி 200 பயணிகளில் உயிரையும் காப்பாற்றியுள்ளார்கள்.