ஈரான் கடற்கரையில் 30 பேர் பயணித்த ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஒன்று திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அஸ்ஸலுயே துறைமுகத்திலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஈரான் வானிலை மையம், பாரசீக வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. எனவே கப்பல் மூழ்கியதற்கு இந்த மோசமான வானிலையே காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் ஒன்று மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டு தேடுதல் மற்றும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.