மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கக்தே வஸ்தி என்ற பகுதியில் நிதின் ( வயது 32 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிதினுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நிதின் தனது மனைவியை 4-ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலுக்கு வந்து பொத்தென்று விழுந்த அந்த பெண்ணுக்கு முதுகு தண்டில் பயங்கர காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவல்துறையினர் மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி நிதின் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.