பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் குல்வந்த் சிங் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் குல்வந்த் சிங் காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாராகியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மொஹாலி எஸ்எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட குல்வந்த் சிங் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 376-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குல்வந்த் சிங் ராணுவ பணியில் இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.