நேற்று இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. களனி என்ற பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் கலவர எதிர்ப்பு வாகனத்தை நிறுத்தியதோடு, மாணவர்களை தடுக்கும் விதமாக சாலைத் தடுப்புகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் மாணவி ஒருவர் கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தியபடி காவலர்களிடம் நீட்டினார்.
ஆனால் காவல்துறையினர் முதலில் யார் அந்த ரோஜாவை வாங்குவது என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த மாணவியும் கையில் இருந்த ரோஜாவை உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார். இறுதியில் அந்த ரோஜாவை காவல்துறை அதிகாரி ஒருவர் பெற்றுக்கொண்டார்.