கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று நினைத்து தனது கைகளாலேயே ஒரு கண்ணை பிடுங்கி கீழே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதியவர் தனது பேரனை கூப்பிட்டு கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்குமாறு பேரனிடம் கூறியுள்ளார். அதன்பின் பேரனும் காலை எடுத்து கண்ணை நசிக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து வலி தாங்காத முதியவர் அழுது புலம்பும் போது அங்கு வந்த மகன் என்ன என்று கேட்டுள்ளார். அப்போது பேரன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதியவரை மீட்டு ஷிமோகாவில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.