மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர்.
மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கு அருகே உள்ள டிப்போவில் அரை லிட்டர் எஸ் எம் பச்சை நிற பால் பாக்கெட் வாங்கிய பெண் நுகர்வோர் பாக்கெட்டுக்குள் ஈ இருந்து மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து டிப்போவில் திருப்பி ஒப்படைத்தார். இந்த தகவல் அறிந்து டிப்போவுக்கு சென்ற ஆவின் அதிகாரிகள் அந்த பாக்கெட்டை பெற்று சம்பந்தப்பட்ட பாக்கெட் குறித்த வீடியோ போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம் என டிப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றனர். பேக்கிங் செய்யும் போது தவறாக நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.