Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. “இளம்பெண்களுடன் டேட்டிங்”…. என்ஜினீயருக்கு நேர்ந்த விபரீதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்ற என்ஜினீயர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய விருப்பமா ? என்ற மெசேஜ் ஒன்று வந்துள்ளது. பின்னர் ராஜேஷ் மெசேஜ் வந்த அந்த நம்பரை எடுத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செல் போனில் பேசியவர்கள் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

மேலும் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய முன்பணமாக ரூ.1,200-ஐ ராஜேஷ் செலுத்தியுள்ளார். இதையடுத்து சுவாதி மிஸ்ரா என்ற பெண் ஒருவர் ராஜேஷை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அவரிடம் அந்த பெண் என்னுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதிக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை நம்பிய ராஜேஷும் ரூ. 86 ஆயிரத்து 900-ஐ செலுத்தியிருக்கிறார்.

ஆனால் ராஜேஷுடன் டேட்டிங் செய்வதற்கு அந்த பெண் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் அதிர்ச்சியில் மீண்டும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆஃபாக இருந்துள்ளது. பின்னரே ராஜேஷுக்கு இருவரும் சேர்ந்து ரூ.88 ஆயிரத்தை தன்னிடம் மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |