பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் சிலருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த செயல்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 80 பேருக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், 160 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.