அரியானா குருகுராமில் உள்ள ஸ்பா மையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளன. அழகு நிலையத்தில் வேலை என்று கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு பின் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: “நான் வேலை இல்லாத நேரத்தில் பல இடங்களில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.
அவர் டாக்டர் கிளினிக் ஒன்றில் என்னை வேலைக்கு சேர்த்து விட்டார். ஆனால் இரண்டு நாட்களில் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். பின்னர் மீண்டும் வேலை தேடினேன். அப்போது 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நபரை சந்தித்தேன். அவர் அழகு நிலையத்தில் என்னை வரவேற்பாளராக பணியில் சேர்த்து விட்டார். அந்த அழகு நிலையம் ஜுமா என்பவருக்கு சொந்தமானது. வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தன்னை ஒரு அரைக்குள் அழைத்துச் சென்று ஒருவர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதனால் நான் வேலைக்கு வர முடியாது என்று கூறினேன்.
அப்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துக் கொண்டு மிரட்டினார்கள். ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து எனது அம்மாவிடம் இதை கூறினேன். அவர் வேலையை விட்டு நிற்கச் சொன்னார். ஆனாலும் அவர்கள் என்னை பின்தொடர்ந்தனர். என் அம்மா ஆபத்தில் உள்ளோம் என ஏற்கனவே புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர் என்று அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது புகார் அளித்த பெண் வயது தொடர்பான ஆவணம் எதுவும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவர் மைனரா என்பது தெரியவில்லை. ஆனால் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.