நாக்பூரில் உள்ள புடிபோரி பகுதியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி கிணற்றில் குதித்துள்ளார். உடனே மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் கிணற்றில் குதித்தார். ஆனால் நீரில் மூழ்கி கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். கிணற்றிலிருந்து குழாயை பிடித்தபடி மூழ்காமல் இருந்த மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.