இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக காணப்படும் சூழ்நிலையில், அவற்றில் அதிகமாக பாதிக்கப்படுவது எனில் ஆதரவற்று பொது வெளியில் அலையும் தெரு நாய்கள்தான். அந்த அடிப்படையில் மும்பையில் தெருநாய்க்கு நடைபெற்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் விலங்கு நல ஆர்வலர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரை அடுத்து , 28 வயதான வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விலங்கு நல ஆர்வலரான மினுசேத், வீடியோ ஆதாரம் ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதில், கைது செய்யப்பட்ட வாலிபர் தெரு நாயை பாலியல் வன் புணர்வு செய்தது பதிவாகி இருந்தது. இதன் காரணமாகதான் காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். அதாவது, பிறந்து 6 மாதமே ஆன அந்த தெரு நாய் மும்பையின் பவாய் நகரிலுள்ள பிரபல மால் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அங்கு உள்ள பார் மற்றும் உணவக பணியாளர்கள் அந்த நாயை பராமரித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த மால் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த விலங்குநல ஆர்வலரான மினுசேத்திடம் அந்த சம்பவம் அடங்கிய வீடியோவை கொடுத்துள்ளார். அதன்பின் மினு சேத் புகாரளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் என்று கூறப்படுகிறது. அந்த நாயிடம் கைது செய்யப்பட்ட வாலிபர் பல நாட்களாக பாலியல் வன் புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை உணவு டெலிவரி செய்யும் சக பணியாளர் ஒருவர் நேரில் பார்த்ததை அடுத்து, அவரது மொபைலில் வீடியோ எடுத்து இருக்கிறார். தற்போது காவல்துறையினர் அந்த வாலிபரை ஐபிசி 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.