ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் நிவாரணப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.