Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே…..! “14 வயது சிறுமியை தாயாக்கிய வாலிபர்”…. பாய்ந்தது போக்சோ…!!!!!

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் எதிர் வீட்டில் 17 வயதான இளைஞர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் இளைஞர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

ஆனால் மாணவிக்கு தான் கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை. நேற்று மாணவி தனக்கு வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் கூறியிருக்கின்றார். இதனால் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து மாணவியை பிரசவ வார்டில் சேர்த்தார்கள். சிறிது நேரத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து டாக்டர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார்கள். பின் மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். இதன்பின் வாலிபரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி இளைஞரை செஞ்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.

 

Categories

Tech |