Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. 3 மாதத்தில் 17 லட்சம் வீடியோக்கள்….. இந்தியர்களுக்கு youtube நிறுவனம் எச்சரிக்கை…..!!!!!

யூடியூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபல சமூக ஊடகமான யூடியூப் இந்த  ஆண்டில் மூன்றாம் காலாண்டுக்கான விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 56 லட்சம் வீடியோக்கள் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளுக்கு மாறாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் 17 லட்சம் வீடியோக்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோகளில் 36 சதவீதம் யாரும் பார்ப்பதற்கு முன்பும், 31% 10 பார்வையாளர்களை கடப்பதற்கு முன்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக யூடியூப் வீடியோக்களில் பதிவிட்ட 73.7 கோடி கருத்துக்கள் நீக்கப்படுகின்றது. அதில் 99% கருத்துக்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 1  சதவீத கருத்துக்கள் மட்டுமே பயனர்களால்  நீக்கப்பட்டது என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |