சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனமாடிய 30 இளம் பெண்களை போலீசார் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்பது கட்டுப்பாடு. ஹோட்டல், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் சென்னையில் சில இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி தொடர்ந்து மது விருந்து ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டை சாலையில் பார் வசதியுடன் இயங்கும் தனியார் விடுதியில் நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை எடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடி இருந்தனர். குடிபோதை தலைக்கேறிய மயக்கத்தில் அந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடி குத்தாட்டம் போட்டு வந்தனர். அதன்பிறகு போதையில் இருந்த வாலிபர்களை கடுமையாக எச்சரித்த போலீசார் 30 இளம்பெண்களின் முகவரி மற்றும் செல்போன் ஆகியவற்றை எழுதி வைத்துக்கொண்டு அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த மதுவிருந்து ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர், மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.