Categories
தேசிய செய்திகள்

அடங்கப்பா…! தலையில் இவ்ளோ பெரிய வெயிட்…. சைக்கிளை பிடிக்கவே இல்ல…. எப்படி போறாருனு நீங்களே பாருங்க…!!!!

ஆனந்த் மஹிந்திரா சாகசமாக சைக்கிள் ஓட்டும் ஒரு நபரின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தலையில் இருகைகளாலும் பாரத்தை சுமந்தபடி சைக்கிள் ஒட்டிச் செல்லும் நபர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த நபர் கொண்டை ஊசி போன்ற வளைவுகளை கொண்ட ஒரு சாலையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதிலும் குறிப்பாக ஹேண்ட் பாரை பிடிக்காமலேயே அந்த பாரத்தை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டி  செல்கிறார்.

ஆனால் இந்த வீடியோவானது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் எதுவும் தெரியாத நிலையில், ஆனந்த் மகேந்திரா அந்த நபருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த அசாத்திய மனிதரின் திறமையை ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய பிறகு இந்த வீடியோ இன்னும் வைரலாக பரவிவருகிறது.

Categories

Tech |