Categories
உலக செய்திகள்

அடங்கி இருங்க… இல்லனா அடக்குவோம்…. சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை …!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிலுள்ள சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீது செய்யப்படும் அட்டூழியங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பிடன் பேசியபோது, சிறுபான்மையினர் சீனாவில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று அனைவரும் அறிவார்கள் என்று கூறியுள்ளார். இதற்காக உலகிற்கு சீனா பதில் அளிக்க வேண்டும் என்றார்.

மனித உரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்புவதில் உலகளாவிய பங்கு வகிக்கிறது அமெரிக்காஎன்றும்  சீனாவில் நடைபெறும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் உலகத்திலேயே தலைமை நாடாக மாறுவதற்கு சீனா விரும்புவதாகவும் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக உள்ளது என்றும் கூறிய அவர் சீனா இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தாவிடில் கடும் விளைவுகளை சீனா சந்திக்கும் என்றும் கூறினார்.

இதனையடுத்து ஜோ பைடன் சீன அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போதும் உய்குர் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற செயல்களை அமெரிக்க ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்தார். சீனா முஸ்லிம்களை அழிப்பதற்காக பிரச்சாரத்தையும் துவங்கி இருக்கிறது.

அதாவது சீன அரசாங்கம் உய்குர் முஸ்லிம்களுடன் இணைந்து ஹைனான் மாகாணத்தில் இருக்கும் மிகக்குறைந்த அளவில் வசிக்கும் உட்சூல் முஸ்லிம்களுக்கு பல விதிமுறைகளை விதித்திருக்கிறது. சீன அரசு அவர்களின் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீக்கியதோடு சிறுவர்கள் அரபு மொழியை பயிலவும் தடைவிதித்துள்ளது. மேலும் ஹைனான் மாகாணத்தில் மாற்றங்கள் மற்றும் தடைகள் பலவற்றையும் அமல்படுத்தியிருக்கின்றனர்.

Categories

Tech |