Categories
தேசிய செய்திகள்

அடச்சீ ! இப்படியா செய்வீங்க ? கணவனின் மோசமான புத்தி… வீடியோவால் குவிந்த பணம் …!!

பணம் சம்பாதிக்க மனைவிகளுடன் நெருக்கமாக இருந்ததை செயலியில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிஷ பகுதியை சேர்ந்த சரஞ்சித் என்பவர் இரண்டு திருமணம் செய்திருந்த நிலையில் தனது மனைவிகளிடம் நெருக்கமாக இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவு செய்து அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதுகுறித்து கடந்த 21 ஆம் தேதி அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் இருப்பதை ஏராளமான செயலிகளில் நேரலையாக பதிவிட்டு சம்பாதித்து வந்துள்ளார். இதற்காக தனது மனைவிகளை அவர் கொடுமைப்படுத்தி உள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரை தொடர்ந்து சனிக்கிழமை அன்று சரஞ்சித்தை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சரஞ்சித் தொழில்நுட்பத்தை நன்றாக கற்று வைத்திருந்தார். அவரது பெயரில் இருந்த மூன்று வங்கி கணக்குகளில் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடந்துள்ளது. அதோடு வீட்டில் 45,000 ரூபாய் ரொக்கப் பணமும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சரஞ்சித்துக்கு முதல் திருமணம் நடந்தது இரண்டாவது மனைவிக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |