கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் அச்சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணம் அவரது தந்தை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் தாய் தனது மகளின் நிலைமை குறித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது. “குழந்தை உயிருடன் இருந்தால் அதைப் பேணி பாதுகாக்கும் பொறுப்பு அச்சிறுமிக்கு சிகிச்சை கொடுத்துவரும் மருத்துவமனையை சாரும். இதற்கிடையில் ஒரு வாரத்தில் மாநில சுகாதாரத்துறை இந்த சம்பவம் தொடர்பான முடிவுகளை தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தையே காரணம் என்றால் சமூகம் வெட்கப்பட வேண்டும் மற்றும் நீதித்துறை கடுமையான தண்டனைகளை அவருக்கு வழங்கும்” என்று உத்தரவிட்டுள்ளார்.