Categories
சென்னை மாநில செய்திகள்

அடச்ச….ஆணின் ஆபாச வீடியோ வைத்து பிளாக்மெயில்…. கூலிப்படை அட்டகாசம்…. ஆத்திரத்தில் 2 கொலை…..!!!!

சென்னையில் உள்ள ஆவடி அருகே ஆபாச படத்தை எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்ய சென்ற போது ஒரே நேரத்தில் இருவரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆவடியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  ஓ.சி.எப் மைதானத்தில் இருவரின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது.

இந்நிலையில் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் ஆவடி வசந்தம் நகரை சேர்ந்த சுந்தர் மற்றும் கௌரி பேட்டையை சேர்ந்த அசாருதீன் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கான பின்னணியில் பார்க்கும்போது பிளாக்மெயில் பஞ்சாயத்து இருப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி ஆவடியில் உள்ள கொள்ளுமேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனைவி பிரிசில்லா உடன் இணைந்து, வேப்பம்பட்டையை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜெகன், மணிகண்டனை ஜாமினில் எடுக்க உதவி செய்துள்ளார்.

இதன்பிறகு அவரது மனைவிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஜெகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகன் பிரிசில்லாவை அழைத்து வந்து தனியாக குடித்தனம் நடத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் பிரிசில்லாவை பலமுறை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து, ஜெகனுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதன்பின் மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், மீண்டும் முதல் மனைவியை தொல்லை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெகன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து வைத்து இணையதளங்களில் பரப்பி விடுவதாக, அவரை பிளாக்மெயில் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க 1 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும்  மணிகண்டனை மிரட்டியுள்ளார். அப்போது மணிகண்டன் 10 நாளில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறி, அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து   ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். அதன்பின் கடந்த சனிக்கிழமை அன்று மணிகண்டன் பணம் ஏற்பாடு செய்து விட்டதாக ஜெகனிடம் கூறியுள்ளார்.

அதனை நம்பிய ஜெகன், ஆவடியில் உள்ள ஓ.சி.எப் மைதானத்திற்கு பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து பணம் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்த ஜெகன், தனது கூட்டாளியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென்று மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படையை சேர்ந்த 4 பேர்கள் அங்கு வந்து ஜெகனை வெட்டிக்கொள்ள முயன்றுள்ளனர். மேலும் அங்கு இருந்த கூட்டாளிகளான சுந்தர், அசாருதீன் ஆகியோர் அந்த கூலிப்படையினரை தடுத்து நிறுத்திய நிலையில், ஆத்திரமடைந்த கூலிப்படையினர்  அவர்கள் இருவரையும் சரமாரியாக கொலை செய்துவிட்டு, ஜெகனை வெட்டுவதற்காக விரட்டியுள்ளனர். இதற்கிடையில் ஜெகன், யாசின் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மணிகண்டன் தலைமையில் கூலிப்படையினரும்  அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார், மணிகண்டன் உள்ளிட்ட கூலிப் படையினரை  தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் ஆவடியை அடுத்த வெள்ளானூர், கிருஷ்ணா கால்வாய் பகுதியில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது, போலீசார் அவனை  பிடிக்க சென்றபோது மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். கூட்டாளிகளான 4பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்த போலீசார் அவர்களுக்கு இந்த இரட்டை கொலையில் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் கூலிப்படையினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |