சர்வதேச புத்தக திருவிழாவில் திருடியதாக தொலைக்காட்சி நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் குப்பை கூடையில் பர்ஸ் ஒன்றை எரிவதை போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். இது பற்றி நடிகை ரூபா தத்தாவுடன் விசாரித்தபோது அவர் தடுமாறியதும் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகையின் பேக்கை பரிசோதனை செய்தனர். அதில் துபாய் 75 ஆயிரம் பணமும் பல பர்ஸுகளும் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகை ரூபா தத்தா தனது பர்ஸை குப்பையில் போட்டு அதை மற்றவர்களிடம் உங்களுடையதா என்று கேட்டு அவர்கள் கவனத்தை திசை திருப்பிய பின் அவர்களது பர்ஸை திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடிகை ரூபா தத்தா மீது ஐ பி சி பிரிவு 379 (திருட்டு) மற்றும் 411 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இவருடன் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை ரூபா தாத்தா ஏற்கனவே ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.