கேரளா மாநிலம் திருச்சூரில் ரதிமேனன்(59) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் ரதிமேனன் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தாயார் தலைமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனின் மகள் பிரசிதா கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினார். இதற்காக திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்த தனிமையில் வாழ்ந்து வந்த திவாகர்(60) என்பவர் தான் தனது தாய்க்கு ஏற்றத் துணை என்று பிரசிதா முடிவு செய்தார். இரண்டு மகளுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பிரசிதா தனது தாயின் தனிமை பற்றியும் அவருக்கு ஒரு துணை வேண்டும் அதில் நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக கூறினார்.
இதனை புரிந்து கொண்ட திவாகரன் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரன் மனநிலை குறித்து அவரது இரண்டு பெண் குழந்தைகளிடம் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதனை தொடர்ந்து தனது தாயின் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கு திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இது குறித்து ரதிமேனின் மகள் பிரசிதா கூறியது, எனது அம்மாவுக்கு நாங்கள் இரண்டு குழந்தைகள். அப்போ உயிரோடு இருக்கும்போது எங்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவரை வீட்டில் வாழ்ந்து வருகிற இந்நிலையில் அப்பா திடீர்னு மரணமடைந்தார். எங்களுக்கும் கணவர் குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலைய போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.