Categories
பல்சுவை

அடடா! இந்த பெண் தினமும் SOAP-தான் சாப்பிடுவாரா….? ஏன் இந்த வினோதப் பழக்கம் தெரியுமா….?

உலகத்தில் உள்ள அனைவருக்குமே பொதுவாக ஏதாவது ஒரு பொருள் மிகவும் பிடிக்கும். அது ஒரு பொருளாகவும், உணவு பண்டங்களாகவும் இருக்கலாம். இந்நிலையில் புளோரிடாவில் வசிக்கும் டெம்சிட் என்ற பெண்மணி சோப் மற்றும் சோப்பு பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் துணி துவைப்பதற்காக சோப்பு பவுடரை பயன்படுத்தும்போது அதனுடைய வாசனை பிடித்ததால் அதை சாப்பிட ஆரம்பித்துள்ளார். இவர் தினமும் அதிகாலை எழுந்தவுடன் முதலில் சோப்பு பவுடரை தான் சாப்பிடுவாராம்.  அதுமட்டுமின்றி ஒரு வாரத்திற்கு 4 சோப்புகளும் சாப்பிடுவாராம்.

இதை தெரிந்து கொண்ட டெம்சிட்டின் பெற்றோர் அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மருத்துவர் டெம்சிட்டை பரிசோதனை செய்து விட்டு அவர் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அதனால் தான் சோப் மற்றும் சோப் பவுடரை சாப்பிடுகிறார் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்மணிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அழிக்கப்பட்டதால் தற்போது டெம்சிட் சோப் மற்றும் சோப் பவுடர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். மேலும் சோப், மண், சாக்பீஸ் உள்ளிட்ட உடம்புக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை யாரவது சாப்பிட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெறுங்கள். அதுதான்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Categories

Tech |