நாம் சாப்பிடும் பபுள்காமை வாழ்நாளில் எங்காவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயமாக ஒட்டி வைத்திருப்போம். குறிப்பாக நாம் பள்ளியில் படிக்கும் போது நம்முடைய பெஞ்சின் அடியில் ஒட்டி வைத்திருப்போம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Seattle என்ற இடத்தில் லட்சக்கணக்கான பபுள் காமை ஒட்டி வைத்திருப்பார்கள்.
அதாவது முதலில் சாதாரணமாக அந்த இடத்தில் பபுள் காமை ஒட்டி வைத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பபுள் காமை ஒட்டுவதற்காகவே நிறைய பேர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த இடம் தற்போது ஒரு சுற்றுலா தளமாக மாறிவிட்டது. மேலும் பபுள் காம் ஒட்டப்பட்ட இடத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.