உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை அடுத்து சிலர் மருத்துவமனைகளில் சேர்ந்தும், சிலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலரும் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.