Categories
Uncategorized உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்த படகு…. 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி….!!

போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்டுள்ள  படகு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் திடீரென  கவிழ்ந்தது.  இந்த படகிலிருந்து பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள காலிசியா பகுதியிலிருந்து சென்றது. இந்த சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த படகிலிருந்த மாலுமியை அருகில் சென்று மீட்டு காப்பாற்றுவதற்கு தடையாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மாலுமியை மறுநாள் காலை வரை காத்திருக்க வைக்க வேண்டியதாயிற்று. மறுநாள் காலையில் 5 ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுக்க 5 நீர்மூழ்கி வீரர்களுடன் மீட்பு கப்பல் சென்று அந்தப் படகிலிருந்த  மாலுமியை உயிருடன் மீட்டுள்ளனர்.

இதில் என்ன அதிசயம் என்றால் அவர் படகுக்குள் காற்று குமிழியை பயன்படுத்தி 16 மணி நேரம் உயிர் பிழைத்தது தான். இப்படிப்பட்ட நிலையில் மனிதன் உயிர்பிழைப்பது சாத்தியமற்றது என்றாலும் அதிசயமானது  என சொல்லப்படுகின்றது. மேலும் மீட்கப்பட்ட மாலுமி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 62 ஆகிறது. இது குறித்து ஸ்பெயின் நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பு கூறியதாவது, “காப்பாற்றப்படும் ஒவ்வொரு உயிரும் எங்களின் மிகப்பெரிய வெகுமதி ஆகும்” என கூறியுள்ளார். மேலும் மீட்கப்பட்ட மாலுமி, மருத்துவ பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Categories

Tech |