Categories
மாநில செய்திகள்

அடடா என்ன ஒற்றுமை! கூட்டாக ஆய்வு நடத்திய இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றேரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாலை கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

முன்னதாக புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Categories

Tech |