Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…! குழந்தைகளுக்காக மாறிய நயன்தாரா…. சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் விக்கி…. வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்காக வருடம் தோறும் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளாரம் நயன்தாரா. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வெளிநாடு சென்று கொண்டாடும் இந்த தம்பதியினர் இந்த வருடம் வீட்டில் குழந்தைகளோடு கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். நெருங்கிய உறவினர்கள் நண்பர்களோடு நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் அளிக்க விக்னேஷ் சிவன் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |