தி லெஜன்ட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் தி லெஜன்ட். இந்தப் படத்தில் ஊர்வசி ரவுத்தலா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வருகிற ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து தி லெஜண்ட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் வெளிநாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையை ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.