ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மலிவான விலையில் பல ஆபர்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கூட தினசரி 2 ஜிபி கிடைக்கும். இதனையடுத்து 100 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
நாம் 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ், கேம்ஸ் போன்றவைகளும் கிடைக்கும். அதன்பிறகு 97 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் போன்றவைகள் கிடைக்கும். மேலும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்எ.ஸ், அன்லிமிடெட் கால் மற்றும் காலர் டியூன் போன்றவைகள் கிடைக்கும்.