Categories
மாநில செய்திகள்

அடடா…! சென்னைவாசிகளே உங்களுக்கு குட் நியூஸ்…. மேயரின் அதிரடி அறிவிப்பு…!!!

  கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை மேயர் பிரியா ராஜன் திறந்து வைத்துள்ளார். 

சென்னை மாநகரில் உள்ள கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் வகையிலான, குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால  தூண்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இந்த ஓவியங்களை திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்க் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேயர் பிரியா ராஜன், கண்ணகி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, கண்ணகி நகர் சமுதாய மருத்துவமனையில் மார்ச் மாதத்தில் மட்டும் தற்போது வரை 48 பேருக்கு பிரசவம் நடந்துள்ளது எனவும் இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே, காசநோய் சிகிச்சை போன்ற வசதிகள் உள்ளதால், பெரும்பாலான மக்கள் இம்மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இதையடுத்து கண்ணகி நகர் பொருத்தவரையில், அழகுபடுத்தும் திட்டத்தில்  வரையப்பட்ட இந்த ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளன என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகளானது சென்னை மாநகராட்சி முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே மழைநீர் வடிகால் கால்வாய்களில்  கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |