Categories
தேசிய செய்திகள்

அடடா! தங்கத்தை எடுக்க உதவிய எறும்புகள்…. அரசுக்கு கிடைத்த ஜாக்பாட்….!!!

சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது  இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து  தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அந்த சுரங்கத்தில் இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் 222.8885 மில்லியன் டன் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு இந்திய புவியியல் துறை மற்றும் தேசிய கனிமவள வளர்ச்சி துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் ஜமுயி ஒரு செம்மண் நிலம் ஆகும். இங்கு எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது. இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அரசு சார்பில் அந்த இடத்தில் தோன்றி பார்க்கும் போது தான் அங்கு தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |