பிரபல நாட்டின் பெயரை மாற்றுவதற்கு ஐ.நா ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக துருக்கி முடிவு செய்தது. இதன் காரணமாக தங்களுடைய நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முடிவு செய்தது. இவர்கள் துர்க்கி, துருக்கி என்ற பெயர்களுக்குப் பதிலாக துர்க்கியே என நாட்டின் பெயரை வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஐ.நா சபைக்கு ஒரு கடிதம் எழுதி கடந்த டிசம்பர் மாதம் அனுப்பினார்.
இதனையடுத்து ஐ.நாவின் ஒப்புதலுக்காக துருக்கி நாடு காத்திருந்தது. இந்நிலையில் ஐ.நா சபை நாட்டின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக துருக்கி நாடு துக்கியே என அழைக்கப்படும். இந்த அறிவிப்பை ஐ.நா பொதுச்செயலாளர் அந்டோனியா குட்ரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.