Categories
மாநில செய்திகள்

அடடா! விவசாயத்தில் புதுமை….. கேப்சூல் முறையில் சாகுபடி…. அசத்தும் விவசாயி….!!!

விவசாயி ஒருவர் புதுமையான முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் விவசாயியான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.காம், பி.எட் உள்ளிட்ட பல பட்டப் படிப்புகளையும், பட்டயப் படிப்புகளையும் படித்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகர் ஒவ்வொரு முறையும் புதுமையான முறைகளை கையாண்டு சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்து ராஜசேகர் கூறியதாவது, எனது விவசாய நிலத்தில் 60-ம் குறுவை நெல் ரகத்தை பயிரிட்டுள்ளேன்.

இதற்காக நெல் ரகத்தை 3:1:1:1 என்ற விகிதத்தில் இலுப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் (பிளான்ட் புரோமொடிங் கிரானுல்ஸ்) ஆகியவற்றை கலந்து நன்றாக உரமாக்கி, அதை ஒரு கேப்சூலில் 3 நெல் மணிகளுடன் சேர்த்து அடைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் பொதுவாக 30 கிலோ விதை தேவைப்படும். ஆனால் கேப்சூல் முறையில் 2 1/2 கிலோ நெல் மட்டுமே போதுமானது.

இந்த 2 1/2 கிலோ நெல்லை உருவாக்க சுமார் 3 நாட்கள் ஆகும். இதனையடுத்து கேப்சூல் விதைகளை மண்ணில் ஊன்றி வைக்கும் போது சுமார் 1/2 நேரத்தில் கரைந்து விதையாகிவிடும். இந்த வேலைக்கு சுமார் 4 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் சாதாரணமாக நெல் வளர 110 நாட்கள் ஆகும். ஆனால் கேப்சூல் முறையில் 90 நாட்களில் வளர்ந்துவிடும். இவர் கண்டுபிடித்த கேப்சூல் முறையை பல விவசாயிகள் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |