Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடா! 54 ஆண்டுகளாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பம்…. இது அல்லவா உண்மையான பக்தி….!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு தெரிய வந்துள்ளது.

இந்த மசூதியை இடித்து விட உறவினர்கள் கூறியபோதும், மசூதியை இடிக்காமல் பார்த்தசாரதியின் தாத்தா தொடர்ந்து பராமரித்து வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பார்த்தசாரதி அந்த மசூதியை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி மசூதியை புதுப்பித்து ஆசையுடன் பராமரித்து வந்துள்ளார். இன்றும் கூட அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் அன்று இஸ்லாமிய சகோதர்களுடன் ஒன்றாக பார்த்தசாரதியின் குடும்பத்தாரும் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

Categories

Tech |