பிரபல நாட்டின் ராணிக்காக பிளாட்டினம் ஜூபிலி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டின் அரசியாக ராணி 2-ம் எலிசபெத் இருக்கிறார். இவர் ராணி ஆக பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் ராணி எலிசபெத்திற்காக பிளாட்டினம் ஜுபிலி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு ஏராளமான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் ராயல் ஜெட் விமான படை பல வண்ணங்களில் வானில் பறந்து கண்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.