பைசாபாத் கன்டோமென்ட் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் பகுதியில் கன்டோமென்ட் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் அந்த ரயில் நிலையம் அயோத்தி கன்டோன்மென்ட் என்று பெயர் மாற்றப்படுகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டில் அரசு பைனாபாத் மாவட்டத்தின் பெயரை அயோத்தி என மாற்றியது. அதேபோல் அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியது. இந்த பெயர் மாற்றம் அனைத்திற்கும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.