இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைப் உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினை சேர்த்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவாக்சின், சினோபார்ம், சினோவாக், பீஜிங் ஆகிய தடுப்பூசிகளை சேர்த்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் 22-ஆம் நாள் முதல் அங்கீகரிக்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.