மோட்டோஸ்போர்ட் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு ‘மோட்டோ ஜிபி’ பைக் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. ‘கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் பாரத்’ (Grand Prix of Bharat) எனும் பெயரில் நொய்டாவில் நடைபெறவுள்ள இந்தப்போட்டியில் 19 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளனர்.
வரும் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்தப் பந்தயத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இன்று மோட்டோ ஜிபியின் வர்த்தக உரிமையாளர் டோர்னா மற்றும் நொய்டாவின் ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் கையொப்பமிட்டுள்ளனர். மேலும், ‘மோட்டோ ஜிபி விரைவில் மோட்டோ ஈ’யையும் இந்தியப் பந்தயத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை அறிமுகம் செய்வது ஆசியாவிலேயே முதல்முறையாகும்.