செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடப்பு ஆண்டு திருவண்ணாமலையில் நடக்கும் தீப திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே குறைந்தபட்சம் 100 மருத்துவ முகாம்களை அன்றைய தினத்தில் அமைக்க வேண்டும்.
மேலும் மெகா திட்டம் ஒன்றை தயாரித்து திருப்பதியை போல திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையை முதல்வரும் நிறைவேற்ற கூறிவிட்டார். எனவே இன்னும் மூன்று வருடத்தில் திருவண்ணாமலையை திருப்பதி போல பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட நகரமாக மாற்றப்படும் என்று கூறியுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.