மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான திறன் போட்டியில் 800 மாணவர்கள் கலந்துகொண்டு கையடக்க செயற்கைகோள்களை உருவாகியுள்ளனர்.
மறைந்த ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சர்வதேச அறக்கட்டளை சார்பாக மதுரவாயிலில் பள்ளி மாணவர்களுக்காக விண்வெளி விஞ்ஞான திறனுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்றவற்றை பயன்படுத்தி 100 பெம்டோ என்ற கையடக்க செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர். இந்த செயற்கை கோள் ஒவ்வொன்றுமே தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இந்த செயற்கைகோள்களில் மழையின் அளவு, காற்றின் நிலை மற்றும் கடல் சீற்றம் போன்றவற்றை கண்டறிவதற்கான கண்டுபிடிப்புகளை தயாரித்துள்ளனர். இந்நிலையில் வரும் 7ஆம் தேதியன்று இந்த செயற்கைகோள்களை அனைத்தும் பலூன் மூலமாக ராமேஸ்வரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்திலும் இந்த சாதனை இடம்பிடிக்கவுள்ளது. மேலும் இதில் சிறந்த தயாரிப்புகளை நாசாவின் மூலமாக விண்ணில் செலுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப் போவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.